சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது.
அடுத்த 12 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறும். இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி செல்லும்.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பு இல்லை. மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ளவர்கள் கரைக்கு உடனே திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.