பல் மருத்துவம் 
செய்திகள்

பல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்

பல் மருத்துவ கவுன்சிலிங் முடிந்துவிட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டுக்கான 1070 இடங்களில் 417 இடங்கள் காலியாக உள்ளன.

மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பு ஆகியவற்றுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் முடிந்ததையடுத்து பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேர்வு கவுன்சிலிங்கும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

பல் மருத்துவ கவுன்சிலிங் முடிந்துவிட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டுக்கான 1070 இடங்களில் 417 இடங்கள் காலியாக உள்ளன.

நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 690 இடங்களில் 640 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி மொத்தம் 1057 இடங்கள் காலியாக இருக்கின்றன.

பல் டாக்டர் படித்தவர்களுக்கு தற்போது போதிய வேலை வாய்ப்பு இல்லை. ஏற்கனவே பலர் படித்துவிட்டு ஆஸ்பத்திரிகளையும் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு ஆட்கள் வரவில்லை.

இதனால் அவற்றை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். வேறு வகையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த படிப்பை யாரும் சீண்டாமல் உள்ளனர்.

முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்து இவ்வளவு காலி இடம் இருப்பதால் கவுன்சிலிங்கை மேலும் நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற திங்கட்கிழமையில் இருந்து மேலும் 3 நாட்கள் கவுன்சிலிங் நடைபெறும்.