செய்திகள்

ஜந்தர் மந்தரில் நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் நிறுத்த வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லியின் மையப்பகுதியான ஜந்தர் மந்தரில் நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் நிறுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

ஆர்.எஸ். ரதோர் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாயம் பெஞ்ச் கூறுகையில் ‘‘டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி, போலீஸ் கமிஷனர் ஆகியோர் இதற்கு பொறுப்பேற்று உடனடியாக போராட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘‘போராட்டக்காரர்களை அஜ்மீர் கேட் ராம்லீலா மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.