10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதில் சமூக அறிவியல் பாடத்தில்தான் அதிகமான மாணவ-மாணவிகள் 'சென்டம்' பெற்றுள்ளனர். இந்த பாடத்தில் 61,115 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 21,717 பேர் கூடுதலாகும். கடந்த ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண் பெற்று இருந்தனர்.
சமூக அறிவியல் பாடத்துக்கு அடுத்தப்படியாக அறிவியலில் 17,481 பேர் சென்டம் பெற்று உள்ளார்.
இது கடந்த ஆண்டை விட குறைவாகும். கடந்த ஆண்டில் அறிவியல் பாடத்தில் 18,642 மாணவ- மாணவிகள் முழு மதிப்பெண் பெற்று இருந்தனர்.
கணிதம் பாடத்தில் 13,759 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணக்கு பாடத்தில் சென்டம் குறைவாகும். கடந்த ஆண்டு கணிதம் பாடத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண் பெற்று இருந்தனர்.
தமிழ் பாடத்தில் 69 பேர் முழு மதிப்பெண் பெற்றனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.
கடந்த ஆண்டு தமிழ் பாடத்தில் 73 பேர் சென்டம் பெற்று இருந்தனர்.