செய்திகள்

செங்கிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

செங்கிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூதலூர்:

செங்கிப்பட்டி அருகே உள்ள கீழதிருவிழாபட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவி பானுமதி (வயது 42). இவர் செங்கிபட்டி சென்று விட்டு புதுக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து தஞ்சையை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பானுமதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.