இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் பெயர் ரஹீம் கார்ன்வால். இவரது உயரம் 6.6 அடி மற்றும் இவரது எடை 140 கிலோ ஆகும். கார்ன்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற வினேதமான சாதனையை படைப்பார்.