புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், இந்தியா கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகிறது. த.வெ.க. மற்றொரு அணியாகவும் களமிறங்குகிறது.
த.வெ.க. அணியில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவின் நேயம் மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 தொகுதிகளில் த.வெ.க. போட்டியிடுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 5-ந்தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி கோரி புதுச்சேரி த.வெ.க. மாநில தலைமை சார்பில் சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.