புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: புதுவை காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு ஆலோசனை

சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி, எதிர்க்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதில் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளும் தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. இதையொட்டி புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் கூட்டணியில் சிதறின.

இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் அரசியல் விவகாரக் குழுகூடி விவாதித்தது. கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார்.

கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இதில் சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி, எதிர்க்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கார்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், அனந்தராமன், மகளிர் அணித் தலைவரி நிஷா, பொதுச்செயலர்கள் தனுஷ், இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.