புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட சின்ன காலாப்பட்டு குப்பம் கடற்கரையில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்க கற்கள் கொட்டப்பட்டாலும் அதனையும் மீறி கடல் சீற்ற காலத்தில் 20 மீட்டருக்கு கடல் நீர் உட்புகுந்து விடுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் அடித்து செல்லப்பட்டன
இதில் 3 படகுகள் மீட்கப்பட்டாலும் அவை முழுமையாக சேதம் அடைந்தன. 2 படகுகளின் என்ஜின்கள் கடலுக்குள் மூழ்கின. ரூ.10 லட்சம் மதிப்பிலான வலைகள் மணலுக்குள் புதைந்துள்ளன. அடிக்கடி ஏற்படும் கடல் சீற்ற பிரச்சனைக்கு தீர்வு காண இந்த பகுதியில் துாண்டில் முன் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.