புதுச்சேரி:
புதுவை மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 100 சதவீதம் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், 75 சதவீதம் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 40 சதவீதம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசி 30கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை முற்றிலும் நீக்கி அரசாணை வெளியிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.