புதுச்சேரி

Puducherry Election: 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மாலை மலர்

புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, எல்.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று நடைபெற்ற இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜ.க.வுக்கு- 10, அ.தி.மு.க-வுக்கு- 2, எல்.ஜே.கே.-2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. தலைமை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் விவரம்:-

1. மண்ணாடிப்பட்டு- நமச்சிவாயம்

2. ஊசுடு- தீப்பாய்ந்தான்

3. காலாப்பட்டு- கல்யாண சுந்தரம்

4. ராஜ்பவன்- ராமலிங்கம்

5. முதலியார்பேட்டை- ஜான்குமார்

6. மணவெளி- செல்வம்

7.திருவள்ளாறு- ராஜசேகரன்

8. நிரவி டி.ஆர்.பி.பட்டினம்- மீனாட்சி சுந்தரம்

9. மாஹே- தினேசன்