புதுவை தே.ஜ. கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... தொகுதிப் பங்கீடு நிறைவு!

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது லட்சிய ஜனநாயகக் கட்சி
புதுவை தே.ஜ. கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... தொகுதிப் பங்கீடு நிறைவு!
Published on

2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி இந்தக் கட்சி கூட்டணியில் இணைவதற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து பாஜக தலைமை உடனான ஆலோசனைக்குப் பிறகு அவர் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். கூட்டணி உறுதியான நிலையில் தொகுதிப் பங்கீடும் இறுதியானது.

அதன்படி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.கே. 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மறுபுறம் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், இருகட்சிகளிலும் தனித்தனியே வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com