புதுச்சேரி

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: புதுவையில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

புதுவை அரசு கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவே கூடாது என ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் புதுவை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். காவிரி உரிமை மீட்புக்குழு புதுவை ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மணியரசன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுவையின் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஞானபிரகாசம், அழகர், இரமேசு, ஜெகதீசன், ஆறுசெல்வன், பாவாடைராயன், பிரியா, ராசாராம், குமார், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருணபாரதி நன்றி கூறினார்.

புதுவை அரசு கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவே கூடாது என ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகவின் அடாவடியை தடுக்க கர்நாடக பொருட்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளாதார முடக்கம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.