புதுச்சேரி

புதுவையில் 424 முகாம்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலியோ குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துகிறது.

அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 74,124 குழந்தைகளும் பயனடைவர். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 424 முகாம்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களான பேருந்து நிலையம், ரெயில் நிலையம், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்கள் என 31 இடங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு அவரவர் பகுதியில் உள்ள ஆஷா, ஏ.என்.எம். அங்கன்வாடி பணியாளர்களைத் தொடர்பு கொள்ளலாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேல் தெரிவித்துள்ளார்.