புதுச்சேரி

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் 2-ந்தேதி நடக்கிறது

ஜூலை 16-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் அமைச்சர்களாக என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக சார்பில் நமச்சிவாயம், ராஜசேகர் ஆகியோர் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. ஓரிருநாளில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் வரும் ஜூலை 2-ந்தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சபாநாயகர் தேர்வுக்கு பிறகு ஜூலை 9-ம்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

ஜூலை 16-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு முன்பு புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி 5 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தற்போது சட்டசபையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.