வாணியம்பாடி:
அம்பலூர் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் பா.ம.க பிரமுகர். இவருடைய வீட்டின் அருகே செட் அமைத்து அதில் அவரது 2 பைக் மற்றும் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த செட்டுக்கு தீ வைத்தனர்.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் ஒரு சைக்கிள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து நாகராஜன் அம்பலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.