செய்திகள்

டெல்லியில் ரூ.100 கோடி செலவில் அம்பேத்கர் நினைவு இல்லம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் அர்ப்பணித்தார்

டெல்லியில் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் நினைவு இல்லத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #pmmodi #Ambedkar

புதுடெல்லி:

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். அந்த இடம் மகாபரிநிர்வான பூமி என அழைக்கப்படுகிறது. அம்பேத்கரை போற்றும் வகையில் அந்த இடத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

நாளை அம்பேத்கரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அம்பேத்கர் நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்தார்.

இவ்விழாவில், பேசிய பிரதமர் மோடி, ‘நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் எத்தனையோ அரசுகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால், அந்த அரசுகள் செய்ய தவறியதை பல ஆண்டுகள் கழித்து பா.ஜ.க. அரசு நிறைவேற்றி, இந்த நினைவு இல்லத்தை அமைத்து திறப்புவிழா நடத்தியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட இந்த திட்டம் தொடர்பான கோப்புகளை பின்னர் வந்த காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டு விட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் கிடப்பில் போடப்பட்ட கோப்புகளை எல்லாம் தோண்டி எடுத்து, அம்பேத்கருக்கு இந்த நினைவு இல்லத்தை அமைத்துள்ளோம்’ எனவும் அவர் தெரிவித்தார். #tamilnews #pmmodi #Ambedkar