மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். நேற்று அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நீத்து, சீனாவின் நியி யூவானை 4-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 54 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி சவுத்ரி, ஜப்பானின் ஐரி செனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.