நாடு முழுவதும் SIR மூலமாக சுமார் 13.3 கோடி வாக்காளர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஞானேஷ் குமார் பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இந்தியா கூட்டணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று தேர்தல் ஆணையம் தலைமையகம் சென்று தேர்தல் ஆணையரை சந்திக்க முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இந்திய வானொலி நிலையம் அருகே தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தரையில் அர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சுமார் 8 மணி நேரம் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பலன் அளிக்காததால், போலீசார் அவர் கைது செய்தனர். பின்னர், விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அப்போது, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் டெல்லி கமிஷனரிடம் அனுமதி கேட்க வேண்டும். அனுமதி பெறாததால் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என்று போலீசார், ஜந்தர் மந்தருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். மற்றவர்களை அழைத்து வருவதற்குள் அவர்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் ராகுல் காந்தியை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். பிரியங்கா காந்தி சாலை படுத்துக் கொண்டு வேனுக்கு செல்ல மறுத்துவிட்டார். பின்னர் பெண் போலீசார் அவரை தூக்கி வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரப்பான சூழ்நிலை நிலவியது.