இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு

கடந்த ஏப்ரல் மாதம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருந்தது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவில் பிராந்திய சமநிலைக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி.) அதற்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை வழங்கியுள்ளது

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட மழைக்காலக் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவரால் முறைப்படி முடித்துவைக்கப்படாமல் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது இரு அவைகளும் மீண்டும் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது

அரசின் அத்தியாவசிய அலுவல்களை மேற்கொள்ள இந்த அமர்வு கூட்டப்படுவதாகக் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.அதனபடி இதில், தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

நவம்பர் 30, 2026 அன்று தொடங்கவுள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்த மசோதாவை மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான கட்சியின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகள் மற்றும் நிலைப்பாடு

மசோதாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறை சமமான பங்கை உறுதிசெய்தால் ஆதரவு தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. தற்போதும் பிராந்திய சமநிலையை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் (பவார்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், 22 எம்.பிக்களைக் கொண்டுள்ள திமுகவும் ஆதரவு தெரிவிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையில் 50 சதவீத விகிதாச்சார உயர்வு வழங்கப்படும் என்பதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை அக்கட்சி எதிர்பார்ப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

மசோதாவின் வரைவு நகல் கிடைத்தவுடன், அதிலுள்ள முக்கிய அம்சங்களை ஆய்வு செய்த பிறகே கட்சியின் விரிவான அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியிடப்படும் என்று ஒய்.எஸ்.ஆர்.சி.பி நாடாளுமன்ற உறுப்பினர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொகுதி மறுவரையறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன்படி இந்த தொகுதிகளின் எண்ணிக்கை 2051 வரை மாற்றமின்றி தொடரும் இந்த தொகுதிகளின் எண்ணிக்கை 2051 வரை மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT