இந்தியா

முழு பணத்தையும் இழந்து சாலையில் அழுதுகொண்டிருந்த இளைஞர்: கோவாவிற்கு சுற்றுலா சென்ற பெண் செய்த செயல்

கோவாவிற்கு சுற்றுலா செல்வதற்காக நிச்சிதா நரேன் என்ற இளம்பெண் ஒருவர் தனது வாகனத்தில் கடற்கரைக்கு சென்றார்.

கோவாவிற்கு சுற்றுலா செல்வதற்காக சென்றிருந்த பெண் ஒருவர், தனது முழுப்பணத்தையும் இழந்து சாலையில் நின்று அழுதுகொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம், அன்பாக பேசிய நிகழ்வு இணையத்தில் பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

கோவாவிற்கு சுற்றுலா செல்வதற்காக நிச்சிதா நரேன் என்ற இளம்பெண் ஒருவர் தனது வாகனத்தில் கடற்கரைக்கு சென்றார். அப்போது கடற்கரையின் சாலை ஓரமாக நின்றுகொண்டு, இளைஞர் ஒருவர் அழுதுகொண்டிருந்தார்.

முழுப்பணத்தையும் இழந்த இளைஞர்

இதையடுத்து நிச்சிதா அந்த இளைஞருடன் உரையாடிய போது, அவர் தன்னை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், தான் தொழில் செய்வதற்காக கோவா வந்ததாகவும் கூறினார்.

மேலும் இங்கே சிறு தொழில் செய்வதற்காக வந்தபோது, தான் வைத்திருந்த முழுப் பணத்தையும் இழந்து விட்டதாக அந்த இளைஞர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிச்சிதா அவரிடம் ஆறுதல் கூறி, உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். மேலும் தன்னால் முடிந்தால் மற்றவர்களிடமும் உதவி கோரி, உங்களுக்கு உதவ முயற்சி செய்வதாகவும் கூறினார்.

இதற்கு இளம்பெண்ணுக்கு நன்றி கூறிய இளைஞர், தனக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறும் கூறினார். இந்த முழு நிகழ்வையும் நிச்சிதா வீடியோ பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வைரைல்

மேலும் அவர் அந்த வீடியோவில், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் கடற்கரையை பற்றியது அல்ல என்றும், சில நேரங்களில் அது, கடவுள் நம் வழியில் அனுப்பும் மனிதர்களை பற்றியது என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நிச்சிதா பகிர்ந்த இந்த நிகழ்வு இணையத்தில் பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த பதிவிற்கு பயனர் ஒருவர், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்றும், இந்த நல்ல பணியை தொடருங்கள் என்றும் பதிவிட்டார்.

நல்ல பணிகள் தொடரட்டும்

மேலும் அவர், இந்த விதமான நல்ல பணிகள், மக்களுக்கு நன்மையை செய்யும் என்றும், இந்த உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு தூண்டுவதாகவும் பதிவிட்டார்.

இதையடுத்து மற்றொரு பயனர், ஆதரவற்ற மனிதர்களுக்கும், குரலற்ற உயிரினங்களுக்கும் நீங்கள் செய்யும் அனைத்து நன்மைகளுக்காகவும் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்றும் பதிவிட்டார்.

SCROLL FOR NEXT