இந்தியா

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு ரூ.12 லட்சம் கொடுத்து கணவரை கொன்ற பெண் கைது

இந்த வழக்கை அனைத்துக் கோணங்களிலும் விசாரித்த போலீசார், நேற்று கூலிப்படையினர் மற்றும் கள்ளக்காதலன் பலகனி வெங்கண்ணபாபு மற்றும் துர்கமணி ஆகியோரைக் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அகிரிபள்ளி மண்டலம், வடலமானுவைச் சேர்ந்த ரெட்டி சுலோமன் ராஜு (வயது 41) இவருடைய மனைவி துர்காமணி. இவருக்கு கிருஷ்ணா மாவட்டம், கண்ணவரம் மண்டலம், கொல்லானபள்ளியைச் சேர்ந்த பாலகனி வெங்கண்ணபாபு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதுபற்றி அவரது கணவருக்குத் தெரிந்ததும், அவர் கண்டித்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட துர்கா மணி கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதுகுறித்து கள்ளக்காதலன் வெங்கண்ண பாபுவிடம் தெரிவித்தார்.

அவர் பாபுலபாடு மண்டலம், பண்டாருகுடெமைச் சேர்ந்த கூலிப்படையினர் கலத்தோட்டி மணிகாந்தா மற்றும் கலத்தோட்டி சாய் சீனிவாஸ் ஆகியோரிடம் பேசினார். அவர்கள் ரூ.12 லட்சம் கேட்டனர்.

அதனை துர்காமணி தருவதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கூலிப்படையினர் சுலோமன் ராஜுவை கடத்தி சென்று சுலோமனின் கழுத்தில் சார்ஜிங் வயரைக் கொண்டு கழுத்தை இறுக்கி அவரைக் கொன்றனர். பின்னர், உடலை அங்கேயே வீசிவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அகிரிபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை அனைத்துக் கோணங்களிலும் விசாரித்த போலீசார், நேற்று கூலிப்படையினர் மற்றும் கள்ளக்காதலன் பலகனி வெங்கண்ணபாபு மற்றும் துர்கமணி ஆகியோரைக் கைது செய்தனர். ஒரு கார், 5 செல்போன்கள், 5 பீர் பாட்டில்கள், செல்போன் பவர் பேங்க் சார்ஜிங் கேபிள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.