சுவேந்து அதிகாரி தலைமையிலான மேற்கு வங்க பாஜக அரசு, ஓபிசி இடஒதுக்கீடு விதிகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும், 77 முஸ்லிம் சமூகங்களை ஓபிசி பட்டியலில் இருந்து நீக்குவதற்குமான இரண்டு மசோதாக்களை நேற்று சட்டமன்றத்தில் நிறைவேறியது.
இதன் மூலம், மாநிலத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டு அளவு 10 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கௌரிசங்கர் கோஷ் தாக்கல் செய்த,
'மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணைய (திருத்த) மசோதா 2026 மூலம், 1993ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 'மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பணிகள் மற்றும் பதவிகளில் காலிப்பணியிடங்கள் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2026' வின் கீழ் 77 முஸ்லிம்கள் சமூகங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
கடந்த திரிணாமுல் காங்கிரஸ்ஆட்சிக் காலத்தில் பல முஸ்லிம் சமூகங்களுக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து 2010 முதல் 2020 வரை பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2024 மே 22 அன்று குறிப்பிட்ட சமூகங்களின் ஓபிசி சேர்க்கை செல்லாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே தற்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இச்சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
புதிய சட்டத்திருத்தத்தின்படி, நெஹாரியா, ஹல்தார், சான்புய், மாலி, கோசி , தர்ஜி, ராஜ்மிஸ்திரி, பதியாரா, மொல்லா, தாலி உள்ளிட்ட 77 முஸ்லிம் சமூகங்கள் ஓபிசி பட்டியலில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அவற்றின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது
அதே வேளையில், ஜோலா அன்சாரி மோமின், ஃபகிர், பஹாடியா, ஹஜ்ஜாம், சௌதுலி ஆகிய சில முஸ்லிம் சமூகங்கள் புதிய ஓபிசி பட்டியலிலும் தொடர்ந்து நீடிக்கின்றன.