மம்தா  
இந்தியா

பாஜகவுக்கு ஷாக்.. திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பும் 3 அதிருப்தி எம்.பிக்கள்?

முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு மசோதாவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தாவின் திரிணமுல் ணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் தோற்று ஆட்சியை இழந்தது. வெற்றி பெற்ற 80 திரிணாமுல் எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களையே எதிர்க்கட்சியாக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார்.

இதனிடையே அதிருப்தியால் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த 20 எம்.பி.க்கள், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் வகையில் 'தேசியவாதக் குடிமக்கள் கட்சி' (NCPI) என்ற பிராந்திய கட்சியில் இணைந்தனர்

இந்த 20 எம்.பி.களில் உள்ள 3 முஸ்லிம் எம்பிக்கள் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் பக்கமே திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

புறக்கணித்த எம்.பி.க்கள்

முர்ஷிதாபாத் தொகுதி எம்பி அபூ தாஹிர் கான், ஜங்கிபூர் தொகுதி எம்பி கலிலூர் ரஹ்மான், பஹரம்பூர் தொகுதி எம்பி யூசுப் பதான் ஆகியோரே அந்த மூவர் ஆவர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ எம்பிக்களின் கூட்டத்திற்கு NCPI அணியின் 17 எம்பிக்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இந்த 3 எம்பிக்களும் இரண்டாவது முறையும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

முஸ்லிம் நலன்

இதனிடையே நாடாளுமன்றத்தில் குடிமக்கள் அவர்களில் ஒருவரான அபூ தாஹிர் கான், "முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு மசோதாவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நாங்கள் பாஜகவில் இணையவோ, என்டிஏ கூட்டணியில் தொடரவோ மாட்டோம்" என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸின் மூத்த எம்பியான சௌகதா ராய் மற்றும் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்களுடன் இந்த 3 எம்பிக்களும் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜி தலைமைக்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலம்

திரிணமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்த 20 எம்பிக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயாமல் இருக்க, மூன்றில் இரண்டு பங்கு (குறைந்தது 19 எம்பிக்கள்) எண்ணிக்கை பலம் தேவையாக உள்ளது.

இந்த 3 எம்பிக்களும் விலகி விட்டால் NCPI அணியின் எண்ணிக்கை 17 ஆகக் குறையும். இதனால் அவர்களின் எம்பி பதவிக்குச் சட்டரீதியான சிக்கல் எழக்கூடும்.

எனவே பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மற்ற எம்பிக்களைத் தக்கவைக்கவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.