இந்தியா

'மாணவர் சங்கம் வேண்டும்' - டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடரும் மாணவர்களின் தீவிர போராட்டம்

பதற்றமான சூழ்நிலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து வகுப்புகளையும் தற்காலிகமாக ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI) பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாணவர் சங்கத்தை (JMISU) மீண்டும் நிறுவக் கோரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்டோபர் 12 முதல் பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களின் போராட்டக் கூடாரங்களை அகற்ற முயன்ற பல்கலைக்கழகப் பாதுகாப்புக் காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கை

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட வளாகத்திற்குள் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு மாணவர் சங்கத் தேர்தல்கள் மற்றும் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர் சங்க தேர்தல் நடத்தபடாதை அடுத்து தங்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தேர்தலை உடனடியாக நடத்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போராட்டம் கலைப்பு

அக்டோபர் 12 முதல் பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முந்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களின் போராட்டக் கூடாரங்களை அகற்ற முயன்ற பல்கலைக்கழகப் பாதுகாப்புக் காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

குறிப்பாக அக்டோபர் 21 அன்று மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு எழுதிய கடிதத்தில், சிபிஐ(எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக மாணவர் சங்கம் இல்லாததை சுட்டிக்காட்டினார்.

பேச்சு மற்றும் சங்க சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகள், மாணவர்களின் உரிமைகள் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர் தேர்தல்கள் குறித்த லிங்டோ குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது ஜாமியா நிர்வாகம் எந்தவிதத் தூண்டுதலும் இன்றி அடக்குமுறையை மேற்கொண்டதாக கம்யூனிஸ்ட் மாணவர் குழுவான AISA குற்றம் சாட்டியுள்ளது.போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் கூறும்போது பல்கலைக்கழகத்தின் தூண்டுதலின் பேரில் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் பரப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அந்த முழக்கங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் கோரிக்கையான மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதே என்று தெரிவித்துள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து வகுப்புகளையும் தற்காலிகமாக ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது. மேலும், மாணவர் சங்கத்திற்கான அரசியலமைப்பை வரைவு செய்ய 5 பேர் கொண்ட குழுவையும், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பேராசிரியர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவையும் நிர்வாகம் அமைத்துள்ளது

மாணவர் சங்கத்தை மீட்டெடுப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களை ஒடுக்க நினைத்த முதன்மை ஒழுங்கு அதிகாரி (Chief Proctor) பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்கள் கூடுதலாக வலியுறுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT