இந்தியா

SIR முறைகேடு: இண்டியா கூட்டணி பேரணியில் கலந்துகொள்ள மம்தா அழைப்பு

வாக்குத் திருட்டுக்கு எதிரான இந்தப் போராட்டம், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களுக்குப் பிடித்தமான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கானப் போராட்டம்.

இந்தியா கூட்டணி சார்பில் நவம்பர் 1, 2026 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள "வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்"பேரணியில் பங்கேற்குமாறு மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையர் மீதான எதிர்ப்பு

தேர்தல் வாக்காளர் பட்டியலை மாற்றி அமைக்கும் "சிறப்பு தீவிர திருத்த"நடவடிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்தியா கூட்டணி குற்றம் சாட்டுகிறது. இதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது இக்கூட்டணியின் முக்கிய கோரிக்கையாகும்.

மம்தா பானர்ஜி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தேர்தல் முறைகேடுகள் மற்றும் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான இந்தப் போராட்டம், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களுக்குப் பிடித்தமான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கானப் போராட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை, வாக்காளர்களின் தரவுகள், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முறை என அனைத்தும் தற்போது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்பையும் பாதுகாக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் இந்த அமைதிப் பேரணியில் பெருமளவில் திரள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT