கர்நாடகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்: SIR-ல் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்

இறுதி வாக்காளர் பட்டியலில் 99.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
voters list
Published on: 
Summary

கர்நாடகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் (SIR) பணியை மேற்கொண்டது. முதன் முதலாக பீகார் மாநிலத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டது.

SIR மூலம் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. உயிரோடு இருப்பவர்கள் பெயர் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறைக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி SIR பணியை தேர்தல் ஆணையம் மேர்கொண்டது.

எஸ்ஐஆர் பணிகள் தொடங்கும் முன் கர்நாடகாவில் 5.54 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 4.46 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

வரைவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 4.46 கோடி வாக்காளர்களில் 43.8 லட்சம் பேருக்கு சில விளக்கங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

எஸ்.ஐ.ஆர். செயல்முறையில் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், புதிய வாக்காளர்கள் உள்ளிட்டோர் தங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலில் 4.55 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 99.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 2,25,40,493 ஆண் வாக்காளர்களும், 2,29,12,355 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2,841 வாக்காளர்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com