இந்தியா

பழங்களின் மேல் எலி மருந்தை தடவிய வியாபாரி - வீடியோ வெளியாகி பரபரப்பு

விற்பனைக்காக வைத்திருந்த பழங்களின் மீது எலி மருந்தை தடவினார்.பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

மாலை மலர்

மும்பையில் வியாபாரி ஒருவர் பழங்களின் மேல் எலி மருந்தை தடவிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில் பழ வியாபாரி ஒருவர், விற்பனைக்காக வைத்திருந்த பழங்களின் மீது எலி மருந்தை தடவி உள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, போலீசார் உடனடி நடவடிக்கையாக 2 பழ வியாபாரிகளை கைது செய்து, அவர்களின் கடைக்கு சீல் வைத்தனர்.

பழ வியாபாரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எலிகளிடமிருந்து பழங்களை பாதுகாக்க இதை பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

எலி மருந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதால் வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.