தலைமைப்பொறுப்பில் தேசத்திற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மன மார்ந்த நல்வாழ்த்துகள் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தலைமைப்பொறுப்பில் தேசத்திற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மன மார்ந்த நல்வாழ்த்துகள். நாட்டின் சேவைக்கான உங்களின் பயணம், ‘அனைவரின் ஆதரவு, வளர்ச்சி, நம்பிக்கை, பிரயாசம்’ என்ற கொள்கையின் வழிகாட்டுதலுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை ஒரு நாடு தழுவிய இயக்கமாக உருமாற்றியுள்ளது.
நான் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, மேம்பட்ட இணைய இணப்பு, எண்ணிம முன்னேற்றம், விரிவடையும் வாய்ப்புகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் பாரதம் அடைந்துள்ள கண்கூடான மாற்றத்தைக் கண்டிருக்கிறேன்.
25 கோடி மக்களைக் கடும் வறுமையிலிருந்து விடுவித்ததே, உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மாபெரும் சாதனையாகும். இது மனித வரலாறு ஒரு போதும் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். பாரதத்திற்கு நீங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் இவ்வேளையில், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வலிமையையும் அருளட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.