திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம்
இந்தியா

கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது அதிருப்தி குழு..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று கூறி வருகின்றனர்.

மம்தா பானர்ஜிக்கு எதிராக செயல்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் கொல்கத்தாவில் உள்ள கட்சி அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. பாஜக ஜனதா கட்சி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

60 அதிருப்பதி எம்.எல்.ஏ.-க்கள்

மம்தா பானர்ஜியின் மீது அதிருப்தி ஏற்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்.எல்.ஏ.-க்களில் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனியாக செயல்பட்டு வருகின்றனர். மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களில் அதிருப்தி எம்.எம்.ஏ.-க்களின் எண்ணிக்கை 3-ல் இரண்டு பங்கைவிட அதிகம் என்பதால் மம்தா பானர்ஜியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை அதிருப்தி குழு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

பிர்ஹாத் ஹகிம், சந்திபன் சகா, ஜவித் கான், கட்சி பொருளாளர் அக்ருஸ்ஸமான் உள்ளிட்டடோர் அலுவலகததிற்குள் சென்றனர். கேட் பூட்டை மாற்றியுள்ளனர். புதிய போஸ்டர் வைத்துள்ளனர். அத்துடன் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அருப் ராய் தலைவர்

கட்சியின் தலைமை செயலகமாக இது செயல்படும் என அறிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அருப் ராய் எம்.எல்.ஏ. எனத் தெரிவித்துள்ளனர். கட்டிட உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இங்குதான் அனைத்து பணிகளுடன் இங்கிருந்துதான் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

அதிருப்தி குழு டெல்லியில் தேர்தல் ஆணையத்தை சந்தித்தது. அப்போது கட்சி சின்னம், சொத்து உள்ளிட்டவை உரிமை கோரியது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ந்தேதிக்குள் இரு தரப்பினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கடிதம் எழுததியுள்ளது.

இதனை அறிந்து மம்தா பானர்ஜிக்கு விசுவாசமான எம்.எல்.ஏ.-க்கள் அங்கு விரைந்தார். அங்கு கேட் பூட்டப்படடிருந்தது. இதனால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இது துரதிருஷ்டவசமானது என்று குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.