விமானத்தை முறையாக பதிவு செய்த விமானப் பயிற்சிப் பள்ளியான ஹார்வ்ஸ் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா 172 ரக விமானம், உரிமம் பெற்ற இரண்டு விமானிகளுடன் ரெஜினாவிலிருந்து சஸ்காட்செவனில் உள்ள கார்லைல் வழியாக மனிடோபாவில் உள்ள ஸ்டீன்பாக்கிற்கு சென்றது.
இது, வெள்ளிக்கிழமை அதிகாலைப்படி சஸ்காட்செவனில் உள்ள கிஸ்பே அருகே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன்படி கனடாவில் விமான பயிற்சி மேற்கொண்டிருந்தபோது நடந்த விமான விபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்தில் உயிரிழந்த அந்த இரண்டு மாணவர்களின் அடையாளங்களை இந்திய துணை தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி இறந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமான பயிற்சின் போது, விமானம் விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்த இந்திய மாணவர்களுக்கு இந்திய தூதரகம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
அவர்களது உடல்களை தாயகம் கொண்டுவரவ தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் என்றும் கூறியுள்ளது.