இந்தியா

திருப்பதியில் ஜூலை 15-ந்தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து

வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்வதால் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1-ந்தேதியிலிருந்து வருகிற ஜூலை 15-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் (பரிந்துரைக் கடிதங்கள்) ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் சாதாரண பக்தர்களுக்கு அதிக தரிசன நேரத்தை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்தையும் நிறுத்துகிறது. அதே சமயம், வழக்கமான ரூ.300 சிறப்பு நுழைவுச் சீட்டுகள் மற்றும் சர்வ தரிசன டோக்கன்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

பொதுவாக பரிந்துரைக் கடிதங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்வதால் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கோடைக்காலத்தின் பெரும் கூட்டத்தைக் கையாள முடியும். பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனத்தை முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.