இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

முதற்கட்ட அறிக்கைகளின்படி, லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த மலப்புரத்தைச் சேர்ந்த மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், புதன்கிழமை நள்ளிரவு ஃபுஜைராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் முஹம்மது அஸ்மில் (21), மிஸ்னா ஜுபின் (21) மற்றும் முஹம்மது ஃபாயிஸ் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள், முஸ்லிம் லீக் தலைவரும், மலப்புரத்தில் உள்ள ஏ.ஆர். நகர் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான டி.கே. மொய்தீன்குட்டி மாஷின் மகன் சித்திக்கின் இரட்டைக் குழந்தைகளும் பேரனும் ஆவர்.

ஃபுஜைராவில் உள்ள நீதிமன்றத்தின் முன்பாக, அமீரகத்தின் பிரதான நுழைவுப் பாதையான ஷேக் கலீஃபா பின் சயீத் தெருவில் இந்த விபத்தானது நிகழ்ந்ததுள்ளது. குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற கார், ஒரு லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது.

முதற்கட்ட அறிக்கைகளின்படி, லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT