இந்தியா

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் படிவம் 6ஐ சமர்பிக்க தடையில்லை - தேர்தல் ஆணையம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31-இன் கீழ் வழக்கை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சம் இருந்தது.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் 6ஆம் எண் படிவங்களை சமர்ப்பிக்க அனுமதித்துள்ளதாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெற்று வரும் மாநிலங்களில், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் 6ஆம் எண் படிவங்களை சமர்ப்பிக்க அனுமதித்துள்ளதாக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்பு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தும், சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) போது தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறாத விண்ணப்பதாரர்கள், படிவம் 6ஐ தாக்கல் செய்வதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31-இன் கீழ் வழக்கை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சம் இருந்தது.

இந்நிலையில் இதை தெளிப்படுத்தும்விதமாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், விண்ணப்பதாரர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்னர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பதாலும் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வரைவு வாக்காளர் அவரது பெயர் இடம் பெறவில்லை என்பதாலும் படிவம் 6 ஐ தாக்கல் செய்ததற்காக வழக்கு தொடரப்படாது என தெரிவித்துள்ளது.

புதிய அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 6 படிவங்களை தத்தம் தற்போதைய வசிப்பிடத்திலுள்ள தேர்தல் பதிவு அலுவலர்அல்லது உதவித் தேர்தல் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

ECI நெட் மூலம் மின்-கையொப்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைனிலும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என்று ஆணையம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

SIRதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஆணையம் தனது பல முடிவுகளில் பின்வாங்கியுள்ளது.

SCROLL FOR NEXT