இந்தியா

டெல்லியில் கைதானவர்கள் நாளைக்குள் விடுவிக்கப்பட வேண்டும் இல்லையெனில்...சோனம் எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலைச் சூழலில் இருக்கும் என்று நான் சற்றும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

தேர்தல் முறைக்கேடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்த திட்டமிட்டிருந்த பிரம்மாண்ட போராட்டத்தை முன்னிட்டு, அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைது மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிஜேபியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பயணித்த விமானத்தின் உள்ளேயே டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிஜேபி-யின் முக்கிய நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

பிரபல யூடியூபர் துருவ் ரதி குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட முக்கிய தலைவர்களான மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோரும் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். நாளைக்குள் அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், நான்உண்ணாவிரதப் போராட்டம அல்லது பாதயாத்திரை மேற்கொள்வது வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சோனம் வாங்சுக் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

நான் எதிர்ப்பார்க்காத ஒன்று

இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலைச் சூழலில் உள்ளது.இன்றைய போராட்டத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் வலியுறுத்தி நான் நேற்று ஒரு செய்தியைப் பதிவிட்டபோது, ​​உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலைச் சூழலில் இருக்கும் என்று நான் சற்றும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

கைது செய்தவர்களை விடுவிக்காவிட்டால்

இப்போராட்டத்தை வழிநடத்தப் பல தலைவர்கள் இருந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்; ஆனால், அவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிகிறேன். கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். நாளைக்குள் அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், நான் உண்ணாவிரதப் போராட்டம் அல்லது பாதயாத்திரை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT