இந்தியா

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசியலமைப்பு அதிகாரத்தின் மீதான மிகப்பெரிய அவமதிப்பு - த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. கண்டனம்

இந்தியா கூட்டணியில் உள்ள தமிழக அரசு இந்த அவமதிப்பை செய்து உள்ளது.

அரசியல் அமைப்பு பாதுகாப்பின் முன்னோடிகள் என்று தங்களை தாங்களே கூறி கொள்பவர்களால் அரசியல் அமைப்புக்கு எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய மற்றும் கோழைத்தனமான அவமதிப்புக்கு இது ஒரு உதாரணம்.

திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய அவமதிப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரே ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தவில்லை.

இது அரசியல் அமைப்பு அதிகாரத்தின் மீதான மிகப் பெரிய அவமதிப்பாகும். இந்தியா கூட்டணியில் உள்ள தமிழக அரசு இந்த அவமதிப்பை செய்து உள்ளது.

ராகுல்காந்திக்கு கேள்வி

நான் இந்தியா கூட்டணி, காங்கிரஸ், ராகுல்காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் அரசியல் அமைப்பை உங்கள் பாக்கெட்டில் வைக்க முயற்சிக்கிறீர்கள்.

ஆனால் தற்போது அரசியல் அமைப்பின் பாதுகாவலரான சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்த நீங்கள் தயாராக இல்லை. அரசியல் அமைப்பு பாதுகாப்பின் முன்னோடிகள் என்று தங்களை தாங்களே கூறி கொள்பவர்களால் அரசியல் அமைப்புக்கு எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய மற்றும் கோழைத்தனமான அவமதிப்புக்கு இது ஒரு உதாரணம் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT