பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்தோப்பின்போது ஓமன் கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது குறித்து மோடி, டிரம்ப் இடம் பேசியதாக கூறி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.
இந்த பாராட்டை வைத்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா ராகுல் காந்தியை கிண்டலடித்துள்ளார்.
பொய் பரப்புரை
"காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அவரது சொந்தக் கட்சியிலேயே ஆதரவு குறைந்து வருகிறது.
இந்திய மாலுமிகள் விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பதாகவும், சரணடைந்துவிட்டதாகவும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் தொடர்ந்து போலிப் பரப்புரையைச் செய்து வந்தது.
ஆனால், பிரதமர் மோடி இந்த விவகாரத்தை டிரம்ப் முன்னிலையில் மிகவும் வலுவாக முன்வைத்தார் என்று கூறி ராகுல் காந்தியின் பொய் பரப்புரையை அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையை ஆதரித்ததோடு மட்டுமன்றி, அவரது ஆளுமை திறனையும் சசி தரூர் புகழ்ந்துள்ளார் என பூனாவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உட்கட்சி மோதல்
மறுபுறம், சசி தரூரின் பாராட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பிரதமர் மோடி சொல்லாததைக் கூட கேட்கும் திறன் சசி தரூருக்கு வந்துவிட்டது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சசி தரூர், "நான் ஊடகச் செய்திகளை விரிவாகப் படித்துவிட்டுத்தான் பேசுகிறேன்; எனது வாழ்க்கையில் எதையும் நான் தவறாகச் சித்தரித்ததில்லை" என்று எக்ஸில் பதிவிட்டுள்ளார்.