இந்தியா

டாடா குழுமத் தலைவர் பதவியில் மீண்டும் சந்திரசேகரன் நியமனம்: டாடா டிரஸ்ட் கடும் எதிர்ப்பு

டாடா குழுமத் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிக்காலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது.

நியமனம்

டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதே பதவியில் மீண்டும் தொடர்வார் என்று டாடா நிர்வாக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாடா அறக்கட்டளைகள் எதிர்ப்பு

டாடா குழுமத் தலைவராக 2017ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிகாலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே இவரின் பதவி நீட்டிப்புக்கு முன்பே டாடா சன்ஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனது பதவியை ராஜினாம செய்வதாக சந்திரசேகரன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

மீண்டும் ஒப்புதல்

இந்த நிலையில் டாடா சன்ஸ் குழும நிர்வாக கூட்டத்தில் சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக மறுநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை

சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க டாடா சன்ஸ் இயக்குனர் குழு எடுத்த முடிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மறுநியமன தீர்மானத்துக்கு , நான்கு இயக்குநர்கள் ஆதரவாகவும் ,டாடா சன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பிலான இயக்குனர்களில் ஒருவருமான நோயல் டாடா எதிராகவும் வாக்களித்தார்.

டாடா டிரஸ்ட்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, தலைவரை நியமிப்பதற்கும் மறுநியமிப்பதற்கும் அறக்கட்டளைகளின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்று டாடா அறக்கட்டளைகள் கூறியுள்ளன.

மேலும், அந்த இரு இயக்குனர்களும் கூட்டத்தில் பங்கேற்று, இருவரும் ஆதரவாக வாக்களித்தால்தான் தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானம் செல்லுபடியாகும் என்றும் டாடா டிர்ஸ்ட தெரிவித்துள்ளது.

நோயல் டாடா எதிராக வாக்களித்துள்ளதால், சந்திரசேகரனின் மறுநியமன தீர்மானம் சட்டரீதியாக செல்லாது என்று டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்தையும் நோயல் டாடா இயக்குனர் குழுவிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்

சந்திரசேகரன் மீண்டும் பதவியேற்பது தொடர்பான பிரச்சினை தற்போது சட்ட மற்றும் நிர்வாக ரீதியான மோதலாக மாறியுள்ளது.சந்திரசேகரனுக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை தொடங்கியிருந்ததாக டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன.

அந்த பட்டியலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.வி.நரேந்திரன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரி சவுரப் அகர்வால், தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போதைய சூழலில், சந்திரசேகரனின் மறுநியமன விவகாரத்தில் டாடா சன்ஸ் இயக்குனர் குழுவுக்கும் டாடா அறக்கட்டளைகளுக்கும் இடையேயான ஒரு மோதல் சூழலலானது ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT