பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரியில் உள்ள முகாமில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கான ஆதாரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், பாஜக பொய் பிரச்சாரம் செய்வதால் தான் மக்கள் ஆதாரத்தை கேட்கிறார்கள் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கூறியதாவது:-
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்திய ராணுவத்தை சீரழிக்கும் துரோகி போல் பேசுகிறார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஏஜென்ட் போல் பேசும் உங்களைப் போன்ற துரோகி தெலுங்கானாவில் இருக்க தகுதி இல்லை. தெலுங்கானா மக்கள் உங்களை விரைவில் விரட்டியடிப்பார்கள்.
சந்திரசேகர் ராவின் கருத்து மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. காங்கிரஸ் எழுதி தருவதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்