சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 
இந்தியா

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் பட்ஜெட் கொண்டு வந்த சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இன்று 2022-23ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் ஆவணங்களை மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து சட்டசபைக்கு எடுத்துச் சென்றார்.

மாலை மலர்

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இன்று 2022-23ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் ஆவணங்களை மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து சட்டசபைக்கு எடுத்துச் சென்றார்.

இந்த பெட்டியை ராய்ப்பூரில் கால்நடை வளாகத்தில் பத்து நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. சாணப் பொடி, பசை மற்றும் மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் சமஸ்கிருதத்தில் 'கோமயே வஸதே லக்ஷ்மி' என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு 'செல்வத்தின் தெய்வம் லக்ஷ்மி பசுவின் சாணத்தில் வசிக்கிறாள்' என்று அர்த்தமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.