இந்தியா

2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது - அமித்ஷா!

நக்சல் ஒழிப்பு போலவே போதைப்பொருளுக்கு எதிராகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கோவாவின் தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமை

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, "போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தி இந்தியாவை 2047-ல் வளர்ந்த பாரதமாக மாற்றும் என்பதே பிரதமர் மோடியின் உறுதிப்பாடு ஆகும்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே சிறிய அளவிலேயே நடந்து வந்தன.

ஆனால், எங்களது தற்போதைய அரசு இந்த போராட்டத்தை தேசிய பாதுகாப்புக்கான முன்னுரிமையுடன் மிகத் தீவிரமாக நடத்தி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியா

மேலும் அவர் பேசுகையில், நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு எவ்வாறு பணியாற்றியதோ, அதேபோல போதைப்பொருளுக்கு எதிராகவும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அந்த வகையில், வரும் 2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லா நாடாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புச் செயல் திட்டத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தயாரித்து வைத்திருக்கிறது என்றும் மந்திரி அமித்ஷா உறுதிபடத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT