இந்தியா

அரசு விருந்தில் கவர்ச்சிகரமான பெண்களை பில் கிளிண்டன் கூர்ந்து கவனித்ததை கவனித்தேன்: சோனியா காந்தி புத்தகத்தில் வெளிப்படை

அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பில் கிளிண்டனின் கவுரவத்திற்காக பிரத்யேக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பில் கிளிண்டன், தனது மகள் செல்சியா மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளுடன் ஷெராடன் ஹோட்டலில் தங்கியிருந்ததை சோனியா காந்தி தன் புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ னும் சுயசரிதைப் புத்தகம் வெளியிடப்பட்டு பெரும் அரசியல் மற்றும் ஊடக கவனத்தைப் பெற்றுள்ளது. இப்புத்தகத்தில், கடந்த 2000-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் குறித்த சுவாரஸ்யமான மற்றும் ரகசியமான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.

அரசு விருந்தில் பில் கிளிண்டனின் இயல்பு

கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பில் கிளிண்டன், தனது மகள் செல்சியா மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளுடன் ஷெராடன் ஹோட்டலில் தங்கியிருந்ததை சோனியா காந்தி தன் புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அப்போது அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பில் கிளிண்டனின் கவுரவத்திற்காக பிரத்யேக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த நிகழ்வில் பில் கிளிண்டனின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுகையில், மோனிகா லெவின்ஸ்கி ஊழல் விவகாரங்கள் சற்றே ஓய்ந்திருந்தாலும், பழக்கவழக்கங்கள் எளிதில் மாறுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வரவேற்பு அறையில் இருந்த மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான பெண்களை பில் கிளிண்டன் ரகசியமாகவும் கூர்ந்து கவனித்ததை தான் அப்போதே கவனித்ததாக அவர் அந்த நூலில் விவரித்துள்ளார்.

பில் கிளிண்டனைத் தாண்டி, பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி மற்றும் இங்கிலாந்தின் இளவரசி டியானா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற தலைவர்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சோனியா காந்தி இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக, இளவரசி டியானா இந்தியாவுக்கு வந்தபோது அவருடன் நிகழ்ந்த உரையாடல்கள் மற்றும் நகைச்சுவையான தருணங்கள் வாசகர்களைக் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன. இந்தியத் தலைவர்கள் மற்றும் சர்வதேச ஆளுமைகள் தொடர்பான பல மறைக்கப்பட்ட பக்கங்களை இந்தத் தன்வரலாற்றுப் புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT