ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வந்தார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் ஒப்பந்தம், மேற்காசிய நெருக்கடி, ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தததாவது:-
* ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது.
* பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை தவிர வேறு தீர்வு இருக்க முடியாது.
* ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து கப்பல்களும் செல்ல உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.
* ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை விரும்பியதில்லை.
* ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன
* அமெரிக்காவை நம்பாமல் இருக்க ஈரானுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஈரானை நம்ப அமெரிக்கர்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன.
* ஈரான் தொடர்பான எதற்கும் ராணுவ தீர்வு இல்லை.
இவ்வாறு அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.