இந்தியா

சவுரவ் தாஸ் மீது லுக் அவுட் நோட்டீஸ்: மும்பை காவல்துறை பிறப்பித்ததாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

வழக்கின் அடுத்த விசாரணையை வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், நவம்பர் 23-ஆம் தேதி மும்பை காவல்துறையால் சவுரவ் தாஸ் மீது லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும், அவருக்குக் காரணங்காட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் இன்னும் அதற்குப் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொள்வதிலிருந்து விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிஜேபி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் மீது, மும்பை காவல்துறையால் லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பயணம் செய்வதைத் தடுத்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக சவுரவ் தாஸ் தாக்கல் செய்த மனு, நீதிபதி அமித் மகாஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சுற்றறிக்கை

விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், நவம்பர் 23-ஆம் தேதி மும்பை காவல்துறையால் சவுரவ் தாஸ் மீது லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும், அவருக்குக் காரணங்காட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் இன்னும் அதற்குப் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், தம் மீது லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்ட விவரம், அதற்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்துத் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனத் சவுரவ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், காக்ரோச் மூவ்மென்ட் குறித்துப் பேசுவதற்காக ஐக்கிய இராச்சியம் செல்லத் திட்டமிட்டிருந்ததாக சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் 23 இரவு லண்டன் செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக, டெல்லி விமான நிலையத்தின் குடியேற்றப் பிரிவில் தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT