இந்தியா

அந்தரிக்கி நமஸ்காரம்...விஜயவாடவில் முதலமைச்சர் விஜய் தெலுங்கில் உரை!

இரு மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைக்காக வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக விஜய், ஆந்திர மாநிலத்துக்கு சென்றுள்ளார். விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கனக துர்கை அம்மன் கோயிலில் வழிபாடு செய்த பின்னர், விஜயவாடாவில் நடைபெற்ற தசரா நவராத்திரி உத்சவ் 2.0நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் விஜய், அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே உரையாற்றினார்

விழாவில் பேசத் தொடங்கிய முதல்வர் விஜய், முதலில் அங்குள்ள உள்ளூர் மக்களைக் கவரும் வகையில் தெலுங்கு மொழியில் பேசி தனது உரையைத் தொடங்கினார். முதல்வர் விஜய் தனது பிரசங்கத்தைத் தெலுங்கில் "அந்தரிக்கி நமஸ்காரம்" (அனைவருக்கும் வணக்கம்) என்று தொடங்கி. தமக்கு அழைப்பு விடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கும், தமக்கு அன்பான மற்றும் சிறப்பான வரவேற்பளித்த விஜயவாடா மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்

விழாவில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த தசரா மற்றும் நவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்

ஆந்திர மாநிலத்துடன் தமிழ்நாடு கொண்டுள்ள சுமுகமான உறவை வெளிப்படுத்தும் விதமாகப் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைக்காக வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்

உரையின் நிறைவாக, தனது வழக்கமான பாணியில் தமிழிலும், என் நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் எனக் கூறி உரையை முடித்தார்.

SCROLL FOR NEXT