இந்தியா

ராஜஸ்தான் மின்சார விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஜுன்ஜுனு மாவட்டத்தின் சபோலி கிராமத்தில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பயன்படுத்திய இயந்திரம், எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் (Overhead Electricity Line) உரசியதால் மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.

குடியரசுத் தலைவர் இரங்கல்

பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தின் வழியாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அந்த பதிவில்

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு

இந்த விபத்து தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ₹2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

மேலும் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவும் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT