இந்தியா

பெங்களூரு மெட்ரோவின் பிங்க் லைனை தொடங்கி வைத்து பயணம் செய்த பிரதமர் மோடி

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் இணைந்து அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு நம்ம மெட்ரோவின் பிங்க் லைன் (Pink Line) வழித்தடத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் இணைந்து அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு மெட்ரோவின் பிங்க் லைன் ரெயில் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.ரெயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி,ஆளுநர் சுதா யாதவ், முதல்வர் டி.கே.சிவக்குமார், எம்.பி தேஜஸ்வி சூர்யா , அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோருடன் இணைந்து பயணம் மேற்கொண்டார்.

நம்ம மெட்ரோவின் புதிய சேவை நவம்பர் 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும். இந்தத் தொடக்க விழாவின் மூலம் பெங்களூருவின் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ நெட்வொர்க் 103.6 கி.மீ. ஆக உயர்ந்து, டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க்காக இது அமையும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

இந்த மெட்ரோ சேவை குறித்து அம்மாநில முதல்வர் டி.கே சிவக்குமார், பெங்களூருவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கும், மேலும் இந்நகரத்தை திறமையானதாகவும், நிலையானதாகவும், பயணிகளுக்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கும் மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் எக்ஸ் தள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளுநர் சுதா யாதவ் ஆகியோருடன் இணைந்து நம்ம மெட்ரோவின் பிங்க் லைனின் உயர்மட்டப் பகுதியைத் தொடங்கி வைத்ததாக சிவகுமார் கூறினார். இந்நிகழ்ச்சியில் பெருநகர பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறந்த முறையில் இணைக்கப்பட்ட பெங்களூருவிற்கான ஒரு புதிய இளஞ்சிவப்புப் பாதை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளுநர் டாக்டர் சுதா யாதவ் ஆகியோருடன் இணைந்து, நம்ம மெட்ரோவின் இளஞ்சிவப்பு வழித்தடத்தின் உயர்மட்டப் பகுதியை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி.

இந்நிகழ்வில், பெருநகர பெங்களூரு மேம்பாட்டுத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு கிருஷ்ண பைரே கௌடா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் உடனிருந்தனர்,"என்று தெரிவித்துள்ளார்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த மெட்ரோ, கலன அக்ரஹாராவிலிருந்து தாவரேகெரே வரை செல்லும் இந்த 7.5 கி.மீ நீளமுள்ள மேம்பாலப் பகுதி, சுதாகுண்டேபாளையா வழியாகச் செல்லும். இது ஜெயதேவ நிலையத்தில் எலக்ட்ரானிக் சிட்டி வழித்தடத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாகத் திறக்கப்பட்ட இந்தப் பிரிவில், ஆரம்பத்தில் சேவைகள் எட்டு நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT