3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், சவுதி இளவரசர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
புதின் கடந்த நேற்று முன் தினமே இந்தியா வந்து சேர்ந்தார். அவருடன் அன்றைய தினம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு 3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
மேலும், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர் தனியாகக் கலந்துரையாடினார்.
வணிகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், மற்றும் உலகளாவிய அமைதி குறித்த விவாதங்கள் இந்தசந்திப்புகளில் பிரதானமாக இடம் பெற்றன.
செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.
ரஷிய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் உக்ரைன் - ரஷிய மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டது.
ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் உடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
செப்டம்பர் 12, நேற்று, இந்தியா வந்து சேர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதல் முறை இந்தியா வந்துள்ளார்.
சீன அதிபருடனான பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை, வர்த்தக சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள இடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இருநாடுகளின் வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்கள் அடிப்படையில் உறவுகள் தொடர வேண்டும்" எனப் பிரதமர் மோடி சீன அதிபரிடம் வலியுறுத்தினார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சேமிகண்டக்டர்,கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் Fintech தொழில்நுட்பம் குறித்துப் பேசப்பட்டது.
அபுதாபி இளவரசர் ஷேக் காலித் உடனான சந்திப்பில் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
வியட்நாம் மற்றும் எத்தியோப்பியத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் கடைசி நாளான இன்று, செப்டம்பர் 13, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் தோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், எகிப்து அதிபர் அல் சிசி, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த உச்சி மாநாடும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கருதப்படுகிறது.