இந்தியா

தங்கம் வாங்க வேண்டாம் என நான் கூறியதை மக்கள் கேட்டதால் விலை குறைந்துள்ளது - பிரதமர் மோடி

லால் பகதூர் சாஸ்திரிஜி ஒருமுறை நாட்டு மக்களை ஒரு வேளை உணவைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டது, தங்கத்தின் விலை குறைவதற்கு உதவியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தேவையற்ற முறையில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு ஓராண்டுக்கு முன் மக்களைக் கேட்டுக்கொண்டதாகவும், அதுவே தற்போது விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற திறன் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.

ஒரு வேளை உணவைத் தவிர்க்கவும்

அங்கு பேசிய அவர், "ஓராண்டுக்கு முன்பு, நான் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். மிகவும் அவசியமானால் தவிர, ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்பதே அந்த வேண்டுகோள்.

மக்கள் அதை ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லால் பகதூர் சாஸ்திரிஜி ஒருமுறை நாட்டு மக்களை ஒரு வேளை உணவைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். நாடு அவரது அழைப்பைப் பின்பற்றியது.

அதே குணமும் மனப்பான்மையும் இன்றும் நம் நாட்டில் உள்ளது," என்று கூறினார்.

தனது ஆலோசனையைப் பின்பற்றியதன் மூலம் தங்களால் பணத்தைச் சேமிக்க முடிந்ததாகப் பலர் தன்னிடம் கூறியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பேச்சைக் கேட்டதால் குறைந்த தங்க விலை

மேலும் அவர், "என்னைப்போன்ற ஒரு சாமானிய மனிதன் தனது தங்கக் கொள்முதலைக் குறைக்குமாறு கேட்டபோது, ​​மக்கள் அதற்கு இணங்கினர். தங்கக் கொள்முதல் குறைந்ததால், அதன் விலையும் குறைந்தது.

இன்று, மக்கள் என்னிடம், 'மோடிஜி, நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டோம். உங்கள் ஆலோசனையைப் பின்பற்றி எங்கள் பணத்தைச் சேமித்தோம்' என்று கூறுகிறார்கள்" என தெரிவித்தார்.

அமெரிக்க-ஈரான் போர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை குறித்த கவலைகளுக்கு மத்தியில், மக்கள் தங்கள் எரிபொருள் மற்றும் தங்க நுகர்வைக் குறைக்குமாறு மோடி கடந்த ஆண்டு வலியுறுத்தியிருந்தார்.

SCROLL FOR NEXT