GOLD PRICE TODAY : இன்று சற்றே குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

கடந்த 10-ந்தேதியில் இருந்து நேற்று வரையில் தங்கம் கிராமுக்கு ரூ.1,745-ம், சவரனுக்கு ரூ.13 ஆயிரத்து 960-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம்
தங்கம்
Published on: 
Summary

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. இன்று ஒரு கிராம் ரூ.45-ம், ஒரு சவரன் ரூ.360-ம் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வாங்கும் நேரம் இது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து மளமளவென சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில், அதற்கு பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

தொடர்ந்து விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வரும் என கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பேசப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் விலை குறையும் என பல நிபுணர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு கொண்டே இருந்தது.

அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் விலை ஏற்ற-இறக்கத்துடன் பயணத்தை தொடங்கினாலும், கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலையில் தொடர்ந்து இறங்குமுகமே காணப்படுகிறது.

ஒரே நாளில் அதிரடி சரிவு

அப்படியாக கடந்த 18-ந்தேதி முதல் பெருமளவில் சரிவை சந்திக்கிறது. கடந்த 18-ந்தேதி சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம், நேற்று முன்தினம் ரூ.1,880-ம் குறைந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே நேற்றும் தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.470 ம் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 760-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலையை பொறுத்தவரையில் பொதுவாக ஏறும் போதுதான் அதிரடியாக ஒரே நாளில் அதிகரிக்கும். ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.3,760 சரிவு என்பது இதுவரை இல்லாத ஒரே நாளில் குறைந்த விலை இறக்கமாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.2,500 வரை குறைந்ததே அதிகபட்ச ஒருநாள் குறைவாக பார்க்கப்பட்டது.

கடந்த 10-ந்தேதியில் இருந்து நேற்று வரையில் கிராமுக்கு ரூ.1,745-ம், சவரனுக்கு ரூ.13 ஆயிரத்து 960-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், வார இறுதிநாளான இன்றும் பெரும் அளவில் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றே குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 465-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் ஆர்வத்தில் உள்ளவர்கள் இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.175-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

20-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,080

19-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,840

18-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.97,720

17-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,760

16-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,320

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

20-11-2026- ஒரு கிராம் ரூ.175

19-11-2026- ஒரு கிராம் ரூ.180

18-11-2026- ஒரு கிராம் ரூ.185

17-11-2026- ஒரு கிராம் ரூ.190

16-11-2026- ஒரு கிராம் ரூ.190

X